பின்மாரி மழை, அறுவடை மழை, எடுத்துக்கொள்ளப்படுதலின் விசுவாசம் (THE LATTER RAIN HARVEST RAIN, RAPTURING FAITH) யோவேல் 2:23-27 "சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப் பண்ணுவார்." இதைக்குறித்து தேவனுடைய தீர்க்கதரிசி பிரன்ஹாம் என்ன கூறியிருக்கிறார் என்பதைச் சற்று கவனியுங்கள். இப்பொழுது தேவன் " திரும்ப அளிக்கப் போகின்றார்" என்று இது கூறுகின்றது. லூத்தரின் காலம் சபைக்கு பழைய நிலையை திரும்ப அளிக்கவில்லை. அது ஒரு சீர்த்திருத்தத்தை மாத்திரமே ஆரம்பித்தது. வெஸ்லியின் காலமும் திரும்ப அளிக்கவில்லை . ஆனால் தேவன் திரும்ப அளிக்க வேண்டும். ஏனென்றால் அவர் தம்முடைய வார்த்தையை மறுதலிக்க முடியாது. இது சபையினுடைய உயிர்த்தெழுதல் அல்ல - இது அந்த “திரும்ப அளிக்கப்படுதலே”. தேவன் சபையை சரியாக , நேராக துவக்கத்தில் இருந்த பெந்தெகொஸ்தேவிற்கு கொண்டு செல்லப் போகின்றார். இப்பொழுது நமக்கு ஏன் ஒரு திரும்ப அளிக்கப்படுதல் தேவையாயிருக்கின்றது என்று யோவேல் 2:25 கூறுவதைச் சற்றுகவனியுங்கள். வெட்டுக்கிளி, பச்சைக்கிளி, முசுக்கட்டைப் பூச்சி, பச்சைப் புழு மரத்தின் வேர் மற்றும் ஒரு சிறு அளவிலான கிளையை மாத்திரமே விட்டு விட்டு மீதி எல்லாவற்றையும் தின்று போட்டது. இந்த பூச்சிகள் யாவும் பல கட்டங்களில் வந்த ஒரே பூச்சியே என்று நமக்குக் கூறப்பட்டுள்ளது. அது சரியே. அப்பூச்சிகள் என்னவென்றால் சபைக்காயேங் களினூடாக, நிறுவப்பட்ட ஸ்தாபன சபைகள் மற்றும் தவறான போதகத்திலும் வெளிப்பட்ட அந்திக்கிறிஸ்து வின் ஆவியே. ஆகவே விடப்பட்டிருந்த அந்த பரிதாபத்திற் குரிய சிறு வேர் மற்றும் கிளையும் தான் திரும்ப அளிக்கப் படவிருக்கின்றது. தேவன் ஒரு புதிய சபையை நடப்போவதில்லை . ஆனால் தம்முடைய மூலச் செடியை மூல விதைக்குத் திரும்பவுமாக கொண்டு செல்லப் போகின்றார். 23ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி போதித்தல் அல்லது "முன்மாரி மழையைக் கொண்டு அதை அவர் செய்கின்றார். அடுத்ததாக வருவது அறுவடையின் மழை அல்லது எடுத்துக்கொள்ளப்படுதலின் விசுவாசம் ஆகும். தீர்க்கதரிசி கூறின தென்னவென்றால், அங்கே முன்மாரியும், பின்மாரியும் உண்டாயிருக்கும் என்று. பின்மாரியிலே, முன்மாரி , பின்மாரி இரண்டும் சேர்த்தே ஏற்படும். சர்வலோகத்திலும் உள்ள ஒரு மகத்தான சபையானது உலகத்தின் ஒரு முனையிலிருந்து உலகின் மறுமுனைவரையிலும் வந்து தவிரமாகப் பரவும் ஒரு மகத்தான செய்தி, மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் இந்த சபையால் செய்து நிறைவேற்றப் படும். அந்நாளிலே தங்கள் தேவனை அறிந்திருக்கின்ற ஜனங்கள் திடங்கொண்டு, மகத்தான செயல்களைச் செப்போர்கள் என்று தானியேல் கூறினான். சரியாக இந்நாளிலே அப்படிப்பட்ட நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். (தானியேல் 12:4, 9-10). ஆகவே ஒரு பின்மாரி மழையானது இருக்கும். அது முன்மாரி மழையைப் போலவே அது வெளிவரும் முன்மாரி மற்றும் பின்மாரி மழை இரண்டுமே ஒன்று சேர்ந்து வரும். அதன் பெயரைக் கொண்டு மற்றும் அதன் பெயரின் கீழாக அநேக போலியான காரியங்கள் மற்றும் போலியான வைராக்கிய இயக்கங்கள் நம்மிடையே காணப்பட்டதென்று நாமறிவோம். ஆனால் தேவனுடைய வார்த்தை உண்மையானதாகவே அப்படியே நிலைத்திருக்கின்றது. இப்பொழுது, இந்த கடைசி நாட்களில், காலத்தின் முடிவுறும் சமயத்தில் மற்றுமொரு கிறிஸ்தவ வெளிச்சமானது - முன்மாரி மற்றும் பின்மாரி மழை சேர்ந்து வரும் - என்று வேதம் வாக்குரைத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும் என்று தீர்க்கதரிசி உரைத்திருக்கின்றான். (சகரியா 14:7). தேவனுடைய ஜீவனை நீங்கள் விரும்புவீர்களானால், தேவனுடைய வார்த்தையைக் கொண்டு ஆரம்பியுங்கள். தேவனுடைய வார்த்தையை அதின் பரிபூரணத்திலும், அதில் ஒவ்வொரு அணுவையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அத்தகைய தேவனின் பரிபூரணம் உங்களில் இருக்குமானால், அதின் மேல் பொழியும் மழையானது உங்கள் தோட்டத்தில் உள்ளது எதுவோ அதை சரியாக உற்பத்தி செய்யும். இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது “மூரே” (m-o-u-r-e-h) என்னும் வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள். மூரே என்னும் வார்த்தைக்கு முன்மாரி - போதித்தல் என்று பொருள். அது மூரே மழை - போதிக்கும் மழை. போதிக்கும் மழை புறப்பட்டது (உபாகமம் 32:2). பில்லி கிரஹாம் இவ்வுலகத்தைத் தட்டி எழுப்பியுள்ளார். பெந்தெகொஸ்தேயினரும் இவ்வுலகத்தைத் தட்டி எழுப்பினர். அதே போல் தேவனுடைய வார்த்தையும் இவ்வுலகத்தைத் தட்டி எழுப்பிற்று. ஆனால் தற்பொழுது காரியம் என்ன? பின்மாரி மழைக்காக அவள் இப்பொழுது காத்துக் கொண்டிருக்கிறாள். அது அவள் தன் கனிகளை பிறப்பிக்கும் போது உண்டாகும் (மத்தேயு 7:15-20). ஓ, நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். எந்த ஜாதி விதையை நீங்கள் உங்கள் நிலத்தில் பயிரிடுகிறீர்களோ அதே ஜாதியைத் தான் நீங்கள் அறுவடை செய்வீர்கள். ஸ்தாபனங்கள் அதிகமான அங்கத்தினர்கள் வேண்டு மென்று விரும்பினால் அதைத்தான் அவர்கள் பெறப்போகிறார்கள். அதைத்தான் அவர்கள் பெற்றிருக் கிறார்கள். பெந்தெகொஸ்தேயினர் அதிக பெந்தெகொஸ்தே யினரை விரும்புகின்றனர். அவர்கள் அதையே பெறப் போகிறார்கள். சரி, ஆனால் வார்த்தை தேவகுமாரர் களையும் தேவகுமாரத்திகளையும் உற்பத்தி செய்யப் போகிறது. அது இனிவரப்போகின்றதாயிருக்கிறது. கவனியுங்கள், வரப்போகிற தாயுள்ள அந்த மகத்தான பின்மாரி மழை செய்யவிருப்பதை கவனியுங்கள். அவர்கள் மதில்கள் மேலாக ஓடித்தாவி ஒரு சேனையாக வரப்போகின்றார்கள். நீங்கள் சிறிது பொறுத்திருங்கள். எந்த ஜாதி விதையை நீங்கள் நிலத்தில் பயிரிடுகிறீர்களோ அதே ஜாதியைத்தான் அறுவடை செய்வீர்கள். பாப்டிஸ்டுகள் மெதோடிஸ்டுகளையும், மெத்தோடஸ்டுகள் லூத்தரன்களையும், லூத்தரன்கள் கத்தோலிக்கர்களையும், ஒருவரையொருவர் மிஞ்ச போட்டியிடுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரை மிஞ்சப் பார்க்கின்றனர். பாருங்கள், அது ஸ்தாபனத்தின் ஆவியாயிருக்கின்றது. ஆனால் இயேசு "இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள். அநேகர் உட்பிரவேசிக்க வகை தேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லு கிறேன்" என்றார். "தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர்" என்றும் இயேசு கூறினார். (மத்தேயு 7:13-14). சிலர் மட்டுமே, சிலர் என்று அவர் கூறியிருப்பாரென்றால் அது தான் தேவ வார்த்தையாகிய வித்து. அது சிபர் தான். அது லட்சங்களாகவோ, கோடியாகவோ அல்ல. வெகு சிலரே அதைக் கண்டுபிடிப்பார்கள். அதைக் கேட்பதற்கென்று முன் குறிக்கப்பட்டவர்கள் தான் அதைக் கேட்டார்கள். முன்மாரி யானது இப்பொழுது சென்று போயிற்று. நாம் பின்மாரியைக் குறித்து அதிகமாக வீண் சந்தடி செய்கின்றோம். நமக்கு பின்மாரி, முன்மாரி, இடைமாரி, வெளிமாரி என்றழைக்கப்படும் இயக்கங்கள் உண்டாயிருந்தன. நான் அன்றொரு நாள் படித்துக் கொண்டிருந்தேன். முன்மாரி என்பதற்கு எபிரெய மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? அது எனக்கு மறந்து விட்டது. முன்மாரி, முதலாம் மழை என்பதற்கு போதிக்கும் மழை" என்று பொருள். இரண்டாம் மழை என்பது ஏற்கனவே போதிக்கப்பட்டதன் மேல் வரும் ஆவி, அது பயிரை பிறப்பிக்கிறது. நமக்கு ஏன் இப்படிப்பட்ட எழுப்புதல் உண்டாயிருந்தது? பெந்தெ கொஸ்தே, பாப்டிஸ்டு, இன்னும் மற்றெல்லா மரங்களும் துளிர்விட்டன. அவை துளிர் விடுமென்று இயேசு கூறினார். நமக்கு என்ன கிடைத்தது? பாப்டிஸ்டுகள் தங்களுக்கு 1944ல் பத்து லட்சம் பேர் அதிகம் கிடைத்ததாக கூறினர். கத்தோலிக்கரின் தொகை எவ்வாறு அதிகரித்தது என்பதைப் பாருங்கள். எல்லா ஸ்தாபனங் களையும் பாருங்கள். பெந்தெகொஸ்தேயினரைப் பாருங்கள். நாம் என்ன செய்தோம்? நாம் ஸ்தாபன வித்துக்களை விதைத்தோம், ஸ்தாபன அறுவடையை அறுத்தோம். தேவனுடைய வித்து மாத்திரம் முன்பு விதைக்கப் பட்டிருந்தால், சபையானது இப்பொழுது தேவனுக்காக அனல் மூண்டு, அடையாளங்களும், அற்புதங்களும் நிகழ்ந்து, ஒரே மனதாயும் ஒரே சிந்தையாயும் ஒன்றுபட்டு எடுத்துக் கொள்ளப்படுதலுக்கென்று சீயோன் நோக்கி அணி வகுத்துச் சென்று கொண்டிருக்கும். அது உண்மை . ஆனால் நாம் என்ன செய்தோம்? தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக நாம் அறிவுத்திறன் கொண்ட பேச்சுகளை ஏற்றுக்கொண்டோம். வார்த்தைக்கு எதிராக நாம் யோசனையை மற்றெல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டோம். மூரே, மூரே என்ற மழை முன்மாரியும், உரிமையின் மழையுமாக கடந்த சென்றது. நடந்ததென்ன? முன்மாரியும் கடந்தது. பின்மாரியும் பொழிந்தது. நடந்ததென்ன? சோதோமும் சோதோமியரும் அக்கினிக்கிரையாயினர்! ஆபிரகாமோ வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெற்றுக்கொண்டான். "இரண்டையும் அறுப்பு மட்டும் வளர விடுங்கள். அறுப்புக் காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி அவைகளைச் சுட்டெரிக் கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள் ; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்று இயேசு கூறினார். (மத்தேயு 13:24-30) பாருங்கள்? பின்மாரியானது சமீபித்திருக்கிறது. அவர்கள் அங்கு என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்? அவர்கள் பின்மாரியை உற்பத்தி செய்ய முயற்சித்தார்கள். அறிவீனம்! சகோதரனே பின்மாரியானது உலகத்தையே அசைக்கும். முன்மாரியானது விதைகளை விதைத்து விட்டது. அது சரி. ஆனால் பின்மாரியானது ஒரு இணைப்பைக் கொண்டு வரும் மழையாயிருக்கிறது. பெந்தெகொஸ்தேயினரும், மற்ற எல்லாக் கூட்டத்தார்களும் ஒன்றாக இணைந்து வார்த்தையைக் கேட்கக் கூடாதவாறு கதவுகளை அடைத்து உங்களுடைய வாயைக் கூடத் திறவாதபடி செய்யப் போகிறார்கள். அது சரி. அவர் வருகின்ற நேரம் அதுவே. அவர் வரும் போது அது தான் நடக்கும். அப்பொழுது மழையைக் காண்பீர்கள் , ஓ என்னே, அமர்ந்திருங்கள். அமைதியாயிருங்கள் ; அப்பொழுது அது கடந்து போக விடுங்கள். பாருங்கள்? யாரோ ஒருவர் அந்த எபிரெய வார்த்தையை திரும்பவும் கூறுமாறு கேட்டுக்கொண்டார், யோவேல் 2:28ல் இந்த முன்மாரியைக் குறித்தும் கூறப்பட்டிருக்கின்றது. முன்மாரி என்ற வார்த்தை எபிரெய மொழியில் மூரே (m-o-u-r-e-h) என்றுள்ளது. இதன் பொருள் போதகம்' என்பதாம். வேறு வார்த்தையில் கூறப்போனால், அது போதக மழையும், அறுவடை மழையுமாகும். நாம் ஏற்கனவே போதக மழையைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறோம். விதையை விதைக்கும் போது பொழிவது முதல் மழையாகும். இதனால் பயிர் வளரத் தொடங்குகின்றது. பின்பு அது முதிர்ச்சியடையும் பருவத்திற்கு சற்று முன்பு மற்றொரு மழை வருகின்றது. அதையே அறுவடை மழையென்கிறோம். வசந்த கால மழையை நாம் அறிந்திருக்கிறோம். அதன் பின்பு ஜூன் மாதத்தில் ஒரு மழை பொழிகின்றது. அதுவே உங்களுடைய பயிருக்கு அறுவடை சமயமாகும். இங்கு மழை என்பது ஆவியைக் குறிக்கிறது என்று நாம் கண்டோம். இப்பொழுது, அந்த முழு காரியமும் என்னவாயிருக்கும் என்ற என் சிந்தனைகளைக் கொடுத்தவுடன் நாம் கலைந்து சென்றோம். அந்த மழை பொழியப்பட்டு விட்டது என்றே நான் விசுவாசிக்கிறேன். ஏற்கனவே பயிரிடப்பட்டு விட்டதினாலேயே நாம் அமைதியாகி விட்டோம். எது எங்கு விதைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் காணமுடியாது. ஏனெனில் அவை வானொலி, தொலைக்காட்சி, ஒலிநாடாக்கள் மூலமாகவும், வார்த்தை யாகவும் தேசம் முழுமையும் விதைக்கப்பட்டிருக்கின்றன. விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. எவ்வித விதைகள் விதைக்கப் பட்டிருக்கின்றனவோ அதையேயன்றி வேறொன்றையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது. அதை புரிந்து கொண்டீர்களா? அது விதைக்கப்பட்ட விதையாகவே யிருக்கும். இப்பொழுது, அதின் மேல் ஆவியான மழை பொழியும். ஆனாலும் எத்தகைய விதையாக நிலத்தில் விழுந்ததோ அதே விதையை அது அறுவடையின் போது கொண்டு வரும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். சரி, இந்த பெந்தெகொஸ்தே கூட்டமும், சுவிசேஷக் கூட்டமும் ஒன்றாக ஊழியம் செய்து ஒரு ஸ்தாபனமாக இணைந்து, பின்பு உலக ஐக்கிய ஆலோசனை சபையில் ஒரு அங்கமாக மாறும் என்பதனை நான் முன்னறிவிக்கிறேன். ஏற்கனவே அவர்கள் அவ்விதமாகயிருக்கின்றனர். அவர்கள் மூலமாக மற்ற சபைகளுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான தடை யுண்டாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட அச்சபைகளைச் (union of Churches) சார்ந்தது மட்டுமே நிலைத்திருக்கத்தக்க தான நிலைமை ஒன்று வருகிறதாயிருக்கிறது. ரோம மார்க்கமான மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் வாங்கவோ, விற்கவோ கூடாத அளவிற்கு ஒரு தடை வரப்போகிறது என்று வேதம் கூறுகிறது. மிருகத்திற்கு ஒரு சொரூபம் (image) கொடுக்கப்பட்டது. அது தான் கத்தோலிக்க மார்க்கத்திற்கு விரோதமாய்ப் பிரிந்த பிராடெஸ்டென்ட் மார்க்கமாகும் (Protestanism). இந்த சொரூபத்திற்கு ... (வெளி.13:4-13), பேசத்தக்கதாக ஆவியையும், சாத்துவத்தையும் கொடுக்க மிருகம் வல்லமையுள்ளதாயிருந்தது. அது அதைச் செய்தது. ஸ்தாபன சபைகளாக ஐக்கிய ஆலோசனை சபையில் அவர்கள் சேரும் போது நடைபெறப்போவது அதுவே. இங்கு அநேக வாலிபர்கள் இருக்கின்றீர்கள். ஒரு வேளை இன்று பகல் அல்லது அடுத்த வருடம் இயேசு வரக்கூடும். அவர் எப்பொழுது வருவார் என்று நான் அறியாதவனாயிருக்கின்றேன். ஆனால் ஒன்றை ஞாபகம் கொள்ளுங்கள்; அவர் வருவதை நான் பார்க்க ஜீவித்திரா விட்டால் (அவ்விதம் அவர் வருவதைக் காண நான் ஜீவித்திருப்பேன் என்று நம்புகிறேன்) இந்த என்னுடைய வார்த்தைகள் உங்கள் செவிகளையும் இருதயங்களையும் விட்டு அகலாதிருப்பதாக. பாருங்கள்? நான் இவைகளை கர்த்தருடைய நாமத்தினால் கூறுகிறேன். ஒரு சங்கம் (union) போன்று அது அமைந்து பின்பு ஆக்கபூர்வமான ஒரு தடையையுண்டாக்கும் ; அவ்விதமாகவே ஸ்தாபனங்கள் முதிர்ச்சியடையும் என்று நான் என் இதயப்பூர்வமாக விசுவாசிக்கிறேன். இங்கு நம்மிடையேயுள்ள சபைகள் எல்லாம் மூடப்பட்டு, ஐக்கிய ஆலோசனைச் சங்கத்தின் அனுமதி அல்லது சான்றிதழ் இல்லாமல் பேசவோ, ஆராதனை நடத்தவோ முடியாத ஒரு நிலைமையுண்டாகும். அந்த சமயத்திற்கு முன்பு நிறைவேறாத எல்லா வேதவாக்கியங்களும் நிறைவேறியாக வேண்டும். எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறியாக வேண்டும். வேதம் நிறைவேறியாக வேண்டும். இந்த அபிஷேகிக்கப்பட்ட செய்தியாளன் வரும் போது, புறஜாதியின் காலம் சபையின் காலங்களோடு முடிவு பெற வேண்டியதாயிருக்கும். அவன் முன்மாரியின் செய்தியாளனின்று தொடங்கி பின்மாரி வரையிலான சத்தியங்களான சர்ப்பத்தின் வித்திலிருந்து ஆரம்பித்து முழு வேதத்தையும் விதைப்பான். (ஆதி. 3:1-7). தன்னுடைய முற்பிதாக்களான எலியா, யோவான் ஸ்நானன் என்பவர்களைப் போன்று அவனும் ஸ்தாபனங்களால் புறக்கணிக்கப்படுவான். ஆகாப் காலத்தில் இஸ்ரவேலில் நடந்த சம்பவம், மல்கியாவினால் உரைக்கப் பட்ட தீர்க்கதரிசி தோன்றும் காலத்தில், அமெரிக்காவில் நடைபெறும். ஏனெனில் இந்த தேசம் இஸ்ரவேலுக்கு உதாரணமாயிருக்கிறது. பின்மாரிக்காலத்தில் கர்மேல் பர்வத பலப்பரீட்சை யானது வரும், வேதம் எழுத்திற்கு எழுத்து நிறைவேறியாக வேண்டும். மல்கியா 3ஆம் அதிகாரத்தில் கூறப்பட்ட முன்னோடியானவன், அவருடைய செய்தியாளன் யோவான் ஸ்நானனாகும். அவன் முன்மாரியில் விதை விதைத்து, அவனுடைய நாளின் சபைகளினால், ஸ்தாபனங்களினால், பரிசேயரினால், சதுசேயரினால் புறக்கணிக்கப்பட்டான். பின்னர் இயேசு வந்து மறுரூபமலையின் பலப்பரீட்சை நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடுபவன் முன்மாரியை (former) விதைப்பான். இயேசு (வார்த்தையானவர்) ஸ்தாபனங்களுக்கும், கோட்பாடு களுக்கும் மத்தியில் ஒரு மகிமையான சவாலாயிருப்பார். அவர் வரும் போது, பலப்பரீட்சை நடக்கும், அவருடைய மணவாட்டியின் எடுத்துக்கொள்ளப்படுதல் ...... முதலாம் பலப்பரீட்சை கர்மேல் பர்வதத்திலும் (1 இராஜாக்கள் 18:30-40) இரண்டாம் பலப்பரீட்சை மறுரூபமலையிலும் (மத்தேயு 17 : 1-8) ; மூன்றாம் பலப்பரீட்சை கூடிய விரைவில் சீயோன் பர்வதத்தில் நடைபெறும். நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விதைகள் பின்மாரிக்கென இப்பொழுது விதைக்கப்பட்டு விட்டன. நினைவில் கொள்ளுங்கள். வெகு விரைவில் ஸ்தாபனங் களின் ஒரு கூட்டு சேர்க்கை உண்டாகப்போகிறது. அது மிகவும் பயங்கரமாயிருக்கும். ஐக்கிய சபைகள் என்ற அமைப்பினுள் அவர்கள் தங்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள். பின்பு நம் போன்ற சபையை கிரியை செய்யக்கூடாதவாறு செய்வார்கள் (அவர்கள் அறிந்த வரை) அந்த நேரத்தில் தான் இயேசு தோன்றி யார் மணவாட்டி, யார் மணவாட்டியல்ல வென்றும் காண்பிப்பார். பின்மாரி மழையைக் குறித்து மிக அதிகமாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பின்மாரி ஸ்தாபன சபை சகோதரராகிய உங்களை நான் புறம்பாக்கவில்லை. ஆனால் அது பின்மாரி அல்ல, பின்மாரியானது அங்கிருக்குமென்றால் தேவனுடைய வல்லமையானது அந்தக் காரியத்தைத் தொட்டிருக்கும். அப்பொழுது அந்த ஸ்தாபனமானது உலக முழுவதும் சென்று உலகத்தை அசைத்திருக்கும். பின்மாரி யானது வரவிருக்கின்றது. காரியமானது என்ன? ஏவாள் செய்தபடியே சபையானது தனக்குத் தானே ஏதோ ஒன்றை உற்பத்தி செய்து கொள்ள முயற்சிக்கின்றது. ஏதோ ஒன்றை உற்பத்தி செய்ய அவள் இன்னும் அதிகமான ஒளியைப் பெற முயற்சித்தாள் (ஆதி. 3:1-5). நாமும் அதே காரியத்தைத் தான் செய்திருக் கின்றோம். நமக்குள்ளாக ஏதோ ஒன்றை உருவாக்க முயற்சிக்கின்றோம். அப்படிச் செய்வதை விட்டு விடுங்கள். தேவன் அதைச் செய்யும்படிக்கு விடுங்கள். அவருடைய வார்த்தையை எடுத்து அதை விசுவாசியுங்கள். அதை உங்கள் இருதயத்தில் பிடித்துக் கொள்ளுங்கள். மழையானது விழத் துவங்கும் போது ஜீவனானது வேர்க்கொள்ளத் துவங்கி வார்த்தை தன்னைத்தானே வெளிப்படுத்தும். ஆகவே பரிசுத்த ஆவியானது விழும் போது அது நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் விழுகின்றது. (மத். 5:45 ; எபி. 6:4-8). நான் நினைப்பது என்னவென்றால், கடந்த சில வருடங்களாக உலக முழுவதுமாக வேகமாக சென்ற இந்த மகத்தான எழுப்புதலுக்கு பிறகு, எல்லா இடங்களிலும் இருக்கின்ற தேவனுடைய பரிசுத்தவான்கள் உன்னதமான நிலையில் இருக்கத்தான் வேண்டும். (எபேசியர் 2:6). தேவனுடைய வல்லமை மருத்துவமனைகள் மற்றும் எல்லா விடங்களிலும் செல்ல வேண்டும். மகத்தான அடையாளங் களும் அற்புதங்களும் அதிசயங்களும் நடக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். ஆனால் மக்கள் இன்னும் நீண்ட காலமாக அசையாமல் நின்று கொண்டேயிருக்க விட அவரால் விட முடியாது. நாம் ஸ்தாபன விதைகளை விதைத்தால் நாம் ஸ்தாபன அறுவடையைத் தான் பெறுவோம். அது முற்றிலும் சரியே. அதைத்தான் நாம் செய்திருக்கிக்கின்றோம். ஒவ்வொருவரும் மற்றவர்க்கு ஒரு பின்மாரியாக ஆகின்றனர். பாருங்கள். லூத்தர் கத்தோலிக்கருக்கு ஒரு பின்மாரியாக இருந்தார். ஜான் வெஸ்லி லூத்தருக்கு பின்மாரியாக இருந்தார். பெந்தெகொஸ்தேயினர் ஸ்தாபனங் களுக்கு பின்மாரியாக இருந்தனர். இப்பொழுது பெந்தெ கொஸ்தேயினர் கூட ஸ்தாபனமாகி விட்டனர். ஆகவே நடக்கப்போவது என்ன? பாருங்கள்? யோவேல் 2 : 28ல் கடைசி நாட்களில் ஜனங்களின் மேல் பின்மாரி பொழியும் என்று அவர் வாக்களித்துள்ளார். அங்கு உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்க சொல் கினாஸ் (Kenos) என்று நினைக்கிறேன். அப்படியென்றால் "தம்மை வெறுமையாக்கினார்" என்று பொருள். நாம் வழக்கமாக கூறுவது போல் யாரோ ஒருவருக்குள் ஏதோ ஒன்று இருந்து அவர் மனம் விட்டுப் பேசி அதை மற்றவர்களுக்கு அறிவித்தார் என்னும் அர்த்தம் அல்ல. அவர் தம்மை ஊற்றி வெறுமை யாக்கினார். நாம் வழக்கமாக கூறுகின்றபடியாரோ ஒருவரில் ஒன்று இருந்து அவர் எடுத்து வெறுமையாக்கினார் என்றவாறு இல்லாமல் அவர் தம்மைத்தாமே முழுவதுமாக ஊற்றி வெறுமையாக்கினார். அவர் தம்முடைய என் மார்ஃபியை (enmorphe) முகமூடியை மாற்றிக்கொண்டார். அவர் தாம் என்னவாக இருந்தாரோ அதனிலிருந்து என்னவாக இருக்கின்றாரோ அதற்கு மாற்றிக்கொண்டார். ஆனால் அவருடைய தன்மையை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. பெந்தெகொஸ்தே நாளன்று அவர் மனுஷகுமாரனா யிருந்ததிலிருந்து தேவனுடைய குமாரனாக தம்மை மாற்றிக்கொண்டார். அவர் அப்பொழுது ஜனங்களுடன் இருக்க வராமல், ஜனங்களுக்குள் இருக்க வந்தார். அந்த அதே தேவன் இந்த மகத்தான காலத்தில் தமது ஊழியத்தை தொடர்ந்து செய்ய அவ்விதம் வந்தார். ஒரு நாள் வரும், அது பகலுமல்ல இரவுமல்ல ; ஆனால் சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும் என்று வேதத்தில் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். புவியியலின்படி சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது. ஆனால் அது அதே சூரியனே (Sun). இப்பொழுது குமாரன் (S-0-n) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின்படி கிழக்கத்திய ஜனங்களாகிய இஸ்ரவேலுக்கு தம்மை வெளிப்படுத்தின போது ...... நமக்கு இருளான நாள் உண்டாயிருந்தது. சீர்திருத்தக்காரர்களின் மூலம் நமக்கு சிறிது வெளிச்சம் உண்டாகி, சபைகளும் ஸ்தாபனங்களும் ஏற்படுத்தப்பட்டு, அதில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாயிருந்தது. அவர்கள் மரித்தோரை அடக்கம் பண்ணி, குழந்தைகளை முத்தமிட்டு, வயது வந்தோர்க்கு விவாகம் செய்து, இப்படியாக சபையில் இருந்து வந்தனர். ஆனால், “சாயங்கால நேரத்தில் வெளிச்சமுண்டாகும்” என்று அவர் கூறியுள்ளார். “சாயங்கால நேரத்தில்" என்றார். வேதவாக்கியம் எதுவும் தவறாயிருக்க முடியாது. பெந்தெகொஸ்தே நாளன்று தம்மை ஊற்றின (kenos) அதே குமாரன் (S-o-n) சாயங்கால நேரத்தில் அதையே செய்வதாக வாக்களித் துள்ளார். பாருங்கள்? அது வாக்களிக்கப்பட்ட விதமாகவே உள்ளது. கிழிக்கப்பட்ட இருகாகிதத்துண்டுகளையும் ஒன்றாக இணையுங்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றும், அவர் என்ன வாக்களித்துள்ளார் என்பதையும் கவனியுங்கள். அப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் என்பதை கண்டு கொள்வீர்கள். அவைகளை ஒன்றாக இணைத்துப் பாருங்கள். அப்பொழுது இந்த மகத்தான மற்றும் வல்லமையானவர் திரை நீக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ள இந்த மகத்தான காரியங்கள் நிறைவேறுவதை காணக்கூடாதவாறு பாரம்பரியங்கள் ஜனங்களின் கண்களைக் குருடாக்கியுள்ளன. அத்தனை ஆண்டுகளாக ஆபிரகாமும் சாராளும் காத்திருந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு அவர்கள் பெற்றுக்கொண்ட கடைசி அடையாளம் என்ன? தேவன் ஒரு மனித உருவில் அங்கு நின்று கொண்டு சாராளின் இருதயத்திலுள்ள சிந்தனைகளை அவர் பகுத்தறிந்தார். (ஆதி. 18:1-15) அது சரியா? அவர் (ஏலோகிம்), "நான் உன்னை வந்து சந்திப்பேன், (நான், தனிப்பெயர்ச்சொல் personal pronoun) ஒரு உற்பவக்காலத் திட்டத்தில் நான் உன்னை வந்து சந்திப்பேன் (ஓ) நீ ஒரு குழந்தைக்காக காத்துக்கொண்டிருந்தாயே அதை நீ கொண்டிருப்பாய் என்றார். (ஆதி. 18:9-10) (5) அதன் பிறகு உடனடியாக அவள் ஒரு வாலிபப் பெண்ணாக மாறினாள். அவனும் ஒரு வாலிபனாக மாறினான். வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட குமாரனாகிய ஈசாக்கு காட்சியில் வந்தான் (ஆதி 21:1-8) பின்மாரியானது பெய்யக் காத்திருக்கிறது வரப் போகும் குமாரனை நீ விசுவாசித்து அந்த வித்தை போதுமான காலம் வரை நீ உனக்குள் வைத்திருந்து விட்டாய், இப்பொழுதோ அவர் வருகிறார் என்று கூறினார். ஆமென். அந்த தெரிந்து கொள்ளப்பட்ட வித்தே இன்று உண்மையான சபையாகும். பாருங்கள். "நீங்கள் அவருக்காக காத்திருக்கிறீர்கள், நான் அவரை உங்களிடம் அனுப்பப் போகிறேன். ஆமென். இதை சொன்னவர் யார்? வார்த்தையானவரே இதைச் சொன்னார். எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு சபைக்கு நிகழ வேண்டிய கடைசி காரியத்தை நீங்கள் காண்கின்றீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அது முற்றிலும் உண்மை . அதை நான் விசுவாசிக்கிறேன். மாரி முடிந்து விட்டது. வெளிப்படுத்தின விசேஷம் முதல் மூன்று அதிகாரங்களைப் படியுங்கள். சபைக்கு என்ன வாக்களிக்கப்பட்டுள்ளது - சபை காலங்களுக்கு இப்பொழுது, பூமியின் இயற்கை செடிவகைகளின் மேல் பொழிகின்ற மழையானது நித்திய ஜீவனை அளிக்கும் ஆவிக்குரிய மழைக்கு ஒரு நிழலாக இருக்கின்றது. அது சபையின் மீது பொழியப்பட்டுக்கொண்டிருக்கின்றது; தேவன் தம்முடைய சபையின் மீது ஊற்றுகின்ற ஆவியிலிருந்து கொட்டுகின்ற மாரிகாலத்து மழையாகும். (சகரியா 10 : 1) ஓ, மிகவும் கீழான மற்றும் தாழ்ந்த நிலையில், எந்த ஒரு சந்தேகமும் கொண்டிராமல் ஸ்தாபனத்தை சாராமல் "ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தில் வருகிற ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் (யோவான் 12 : 13) என்று சத்தமிட்டு அந்த சிறிய கழுதையின் மேல் வந்த அவருடனே வந்து கொண்டிருக்கின்ற அந்த சிறு குழுவின் மேல் கடைசி நாட்களில் ஒரு உண்மையான முன்மாரி மற்றும் பின்மாரி பொழியும். வார்த்தை இதை வாக்களித்துள்ளது : "இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். அவன் பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்களுடைய பிதாக்களிடத்திற்கு திருப்புவான்.” (மல். 4 : 4-6). “இதோ கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். முன்மாரியும் பின்மாரியும் கடைசி நாட்களில் ஒன்றாக பெய்யும்.'' (சங்கீதம் 72 : 6) இந்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் நமக்கு வேதத்தின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளன. நாம் மேலே நோக்கினவர் களாய், இந்த நேரத்தில் தேசம் முழுவதிலுமுள்ள உண்மையான மணவாட்டியை கவனித்துக் கொண்டிருக்கிறோம். மேலே நோக்குகிறோம். சபையே, அவர் இந்நாட்களில் ஒன்றில் வருவார். அவர் முதல் முறை வந்தது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாய் அவர் மறுபடியும் வருவார். எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துங்கள். உங்களை பதரிலிருந்து பிரித்துக் கொள்ளுங்கள். சூரிய வெளிச்சத்தில் இருங்கள். மேல் நோக்கிப் பாருங்கள். எதிர்நோக்குதலுடன் இருங்கள் (ஓசியா 6:3). சகோதரனே, நாம் எல்லாவற்றையும் ஆயத்தப் படுத்துவோம். ஏனெனில்; இந்நாட்களில் ஒன்றில் அக்கினி விழும். நாம் மேலே செல்வோம். அக்கினி விழும் நேரத்துக்கு நாம் ஆயத்தமாவோம். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். அது நாம் அனைவருக்கும் தெரியும். நாம் கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாயிருக்கிறோம். நாம் செய்ய வேண்டியது நம்மை எல்லா பாவத்தினின்றும் பிரித்துக் கொள்வதே, உலகத்தோடு சம்பந்தப்பட்டுள்ள எல்லாவற்றினின்றும் உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள். 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள் . (1 யோவான் 2 : 15). எந்த மனிதனும் தன் கோட்பாட்டினால் உங்களை மோசம் போக்காதிருப்பானாக. நீங்கள் தேவனுடைய வாக்குத் தத்தத்திலும் தேவனுடைய வார்த்தையிலும் நிலைத்திருங்கள். அந்த வார்த்தை இக்காலத்திற்குரிய வார்த்தையாயிருக்குமானால், தேவன் அதை உறுதிப் படுத்துவார். அவர் அதை உறுதிப்படுத்தாவிட்டால், அது இந்நாளுக்குரிய வார்த்தையல்ல. பெந்தெகொஸ்தே நாளன்று விழுந்த வார்த்தை இந்நாளில் கிரியை செய்யாது. இல்லை ஐயா, பெந்தெகொஸ்தேகாரர் அதற்கு மறுபடியும் பிரதிநிதிகளாயிருக்கின்றனர். நாமோ மணவாட்டியின் காலத்தில் இருக்கிறோம். நோவாவின் வார்த்தை மோசேயின் நாட்களில் கிரியை செய்திருக்காது. மோசேயின் நியாயப்பிரமாணம் பவுலின் காலத்தில் கிரியை செய்திருக்காது. சபையே, நான் பேசிக்கொண்டிருக்கும் நாடு முழுவதிலும் உள்ளவர்களே, நீங்கள் ஸ்தாபனத்திலிருந்தும் உலகத்தின் அசுசியிலிருந்தும் உலகத்தின் காரியங்களிலிருந்தும் உங்களைப் பிரித்துக் கொள்வீர்களானால் ...... மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளிலிருந்தும், நியமங்களி லிருந்தும் உங்களைப் பிரித்துக் கொண்டு மேலே நோக்கிப் பாருங்கள். ஆயத்தமாகுங்கள். இந்நாட்களில் ஒன்றில் அக்கினி விழப்போகின்றது. தேவன் அவரை அனுப்பப் போகிறார். அது காண்பதற்கு சிறந்த காட்சியாயிருக்கும். அவர் வரும் போது நீ ஆயத்தமாயிருப்பாயா? அவர் வரும் போது அவருடன் கூட மேலே செல்ல நீ ஆயத்தமாயிருப்பாயா? இயற்கைக்கு மேம்பட்ட மணவாட்டியின் இரகசியமாக எடுத்துக் கொள்ளப்படுதல் - அழிவுள்ள தன்மையிலிருந்து அழியாமைக்கு மாற்றப்படுவாள். அவள் ஒரு நொடிப் பொழுதில், ஒரு இமைப் பொழுதில் மறுரூபமாவாள் (1 கொரி. 15:51 - 54). கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோ டிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வ தில்லை . (1 தெச 4:14-17) இது இரட்சிப்பின் நாளென்று நாமறிவோம். இந்நாளில் தேவன் மனிதரை உலகத்திலிருந்து அழைத்து, பாவமான வாழ்க்கையிலிருந்து ஊழியம் செய்யும் ஜீவியத்திற்கென்று அழைக்கிறார். தேவன் உயரத்திலிருந்து தமது ஆவியை ஊற்றி, இந்நாளின் ஊழியத்தில் மகத்தான அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கும்படி செய்கிறார். இது முன்மாரியும் பின்மாரியும் ஒன்றாக விழும் நேரமாகும். மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் இந்நாளில் நிகழவேண்டுமென்றும் அதை ஸ்தாபனங்கள் புறக்கணிக்குமென்றும் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் நான் உள்ளே செல்ல இந்த திறந்த வாசல்கள் இன்றும் உள்ளதற்காகவும் இங்குள்ள உங்கள் போதகரைப் போன்ற இளைஞருக்கு அது அளிக்கும் உற்சாகத்துக்காகவும் நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்... எனக்கு வயதாகிக் கொண்டே போகின்றது. என் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன என்று அறிவேன். என் சந்ததியில் அவர் வராமல் போனால், இந்த இளைஞர்கள் இந்த செய்தியை கர்த்தருடைய வருகை மட்டும் கொண்டு செல்லலாம்.... அவரை நான் காண்பேன் என்று நம்புகிறேன். அதற்காக நான் ஒவ்வொரு நாளும் விழிப்புடன் காத்திருந்து, அந்த மணி நேரத்துக்காக என்னை ஆயத்தமாக வைத்துக்கொண்டிருக்கிறேன். Reference 1. ஏழு சபை காலங்கள் வியாக்கியானம் - பக்கம் 79. 2. மரியாளின் விசுவாசம் பாரா E- 36 3. பயப்படாதீர்கள், அது நான் தான். (14.04.61 ) பாரா E-22 4. எல்லாவற்றையும் விட்டுவிடுதல் (23.01.62) பாரா E-76 5. உரைக்கப்பட்ட வார்த்தையே மூலவித்து (18.03.62) காலை பக்கம் 29, 46, 48, 50, 55, 64, 75,123, 125 6. யேகோவாயீரே பாகம் - 1 (05.07.62) பாரா 54 7. கடைசிக்கால வித்தின் அடையாளம் (19.03.62) பாரா E-65 8. இவருக்கு செவி கொடுங்கள் (11.07.62) பாரா E-65 9. இன்னும் ஒரு விசை (17.11.63) பாரா 17 10. நமது முன்னிலையில் திரை நீக்கப்பட்டுள்ள வல்லமை யுள்ள தேவன் (29.06.64) பாரா - 15 11. கேள்விகளும் பதில்களும் (23.08.64 மாலை) COD பக்கம்